< Back
உலக செய்திகள்
இலங்கை அரசு யாருடன் வேண்டுமானாலும் இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும் - ரணில் விக்கிரமசிங்கே
உலக செய்திகள்

"இலங்கை அரசு யாருடன் வேண்டுமானாலும் இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும்" - ரணில் விக்கிரமசிங்கே

தினத்தந்தி
|
6 Aug 2022 9:59 PM IST

பிராந்திய ரீதியிலான ஒப்பந்தங்களை மேற்கொள்வதில் நிறைய அரசியல் உள்ளது என்று ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.

கொழும்பு,

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையை மீட்டுக் கொண்டு வர, அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களின் தொடர் போராட்டங்களால் அங்கு ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில், அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பியோடினார்.

இதையடுத்து இலங்கையில் அதிபராக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கே, பொருளாதார நெருக்கடியை சரிசெய்யும் முயற்சியில் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே இலங்கை அரசுக்கு இந்தியா சார்பில், இதுவரை சுமார் 5 மில்லியன் டாலர் அளவிலான அவசரகால உதவிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரணில் விக்கிரமசிங்கே, பிராந்திய ரீதியிலான ஒப்பந்தங்களை மேற்கொள்வதில் நிறைய அரசியல் உள்ளது என்றும், இலங்கை அரசு தனக்கு யாருடன் வேண்டுமானாலும் இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளிடையே பிராந்திய அளவில் இருதரப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்வதில் நிறைய அரசியல் இருப்பதாக தெரிவித்த அவர், எந்த நாடுகளின் பெயரையும் குறிப்பிடாமல், இலங்கை அரசால் பிராந்திய அளவில் பொருளாதார ரீதியிலான ஒருங்கிணைப்பை மேற்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்