< Back
உலக செய்திகள்
இலங்கையில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்

கோப்புப்படம்

உலக செய்திகள்

இலங்கையில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்

தினத்தந்தி
|
8 Dec 2022 1:33 AM IST

இலங்கையில் கொரோனா கட்டுப்பாடுகள் அதிரடியாக நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு,

கொரோனா பரவலை கட்டுப்படுத்த வெளிநாட்டினர், சுற்றுலா பயணிகள் இலங்கை வர அந்நாட்டின் சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதன்படி கொரோனா தடுப்பூசி, கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் போன்றவற்றை சுற்றுலா பயணிகள் வைத்திருக்க வேண்டும்.

இந்த நிலையில் நேற்று இலங்கை சுகாதார அமைச்சகம் இந்த கொரோனா கட்டுப்பாடுகளை அதிரடியாக நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. ஒருவேளை இலங்கை வந்த பின்னர் கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்கள் தனியார் ஆஸ்பத்திரி, ஓட்டல் அல்லது அவர்களது வீட்டிலேயே 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தலுக்கான செலவுகளை அவர்களே ஏற்க வேண்டும் என இலங்கை சுகாதார அமைச்சக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்