< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் 5 சதவீத செலவினத்தை குறைத்துக் கொள்ளுங்கள்; இலங்கை மந்திரிகளுக்கு ரணில் விக்ரமசிங்கே உத்தரவு
|10 Jan 2023 11:16 PM IST
பட்ஜெட்டில் ஒவ்வொரு அமைச்சகத்துக்கும் ஒதுக்கப்பட்ட நிதியில் 5 சதவீத செலவினங்களை குறைத்துக் கொள்ளுமாறு மந்திரிகளுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த ஆண்டு தொடங்கிய பொருளாதார நெருக்கடி இன்னும் நீடித்து வருகிறது. இந்தநிலையில், மந்திரிசபை செய்தித்தொடர்பாளரும், போக்குவரத்து மந்திரியுமான பந்துல குணவர்த்தனே, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இலங்கை கருவூலம் கடுமையான நிதி தட்டுப்பாட்டில் உள்ளது. அதனால், பட்ஜெட்டில் ஒவ்வொரு அமைச்சகத்துக்கும் ஒதுக்கப்பட்ட நிதியில் 5 சதவீத செலவினங்களை குறைத்துக் கொள்ளுமாறு மந்திரிகளுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடி, நாங்கள் எதிர்பார்த்ததை விட மோசமாக உள்ளது. இந்த ஆண்டின் முதல் சில மாதங்களில் வரிகள் மூலம் ஈட்ட நினைத்திருந்த வருவாய், குறைவாகத்தான் கிடைக்கும் என்று கருதுகிறோம்.
ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கு அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அளிப்பதிலும் பிரச்சினை எழுந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.