< Back
உலக செய்திகள்
இலங்கை அரசுக்கு  இன்னும் நிதியுதவி தேவை - ரணில் விக்கிரமசிங்கே
உலக செய்திகள்

இலங்கை அரசுக்கு இன்னும் நிதியுதவி தேவை - ரணில் விக்கிரமசிங்கே

தினத்தந்தி
|
7 Jun 2022 10:21 AM GMT

இலங்கை அரசுக்கு அடுத்த 6 மாதங்களில் 5 பில்லியன் டாலர் நிதியுதவி தேவைப்படுகிறது என அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.

கொழும்பு,

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அரிசி, பருப்பு, காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விலை வானளவு உயர்ந்து, மக்கள் வாழ வழியின்றி ஒரு வேளை உணவுக்குக் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில் ஆளும் அரசுக்கு எதிராக இலங்கை வாழ் மக்கள் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்ததைத் தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் ராஜினாமா செய்தார். இதையடுத்து இலங்கையில் புதிய பிரதமர் பதவியேற்று அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. பொருளாதார நெருக்கடியைச் சீர்செய்ய புதிய அமைச்சரவை போராடிவருகிறது.

இந்தநிலையில், கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கை தனது அத்தியாவசிய மற்றும் எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிக நிதியுதவி தேவை என இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பாராளுமன்றத்தில் பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

" இலங்கை அரசுக்கு அடுத்த 6 மாதங்களில் 5 பில்லியன் டாலர் நிதியுதவி தேவைப்படுகிறது. பொருளாதாரத்தை நிலைப்படுத்துவது மட்டும் போதாது. அதனை பழைய நிலைக்கு வலிமையாக்க வேண்டும். இடைக்கால பட்ஜெட் தயாராகி வருகிறது. கடும் அந்நியச் செலாவணி தட்டுப்பாட்டால் அத்தியாவசியத் தேவைகளான எரிபொருள்,மருந்துகள் மற்றும் உரங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாத சூழலே நிலவுகிறது." என்றார்.

மேலும் செய்திகள்