< Back
உலக செய்திகள்
இங்கிலாந்தில் மன்னர் சார்லசின் முடிசூட்டை குறிக்கும் சிறப்பு நாணயம் வெளியீடு
உலக செய்திகள்

இங்கிலாந்தில் மன்னர் சார்லசின் முடிசூட்டை குறிக்கும் சிறப்பு நாணயம் வெளியீடு

தினத்தந்தி
|
10 Aug 2023 8:49 PM GMT

இங்கிலாந்தில் மன்னர் சார்லசின் முடிசூட்டை குறிக்கும் சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டது.

லண்டன்,

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். அதனை தொடர்ந்து அவரது மூத்த மகனான இளவரசர் சார்லஸ் மன்னராக அரியனை ஏறினார். அவர் 3-ம் சார்லஸ் என அழைக்கப்படுகிறார். மன்னர் சார்லசின் அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா கடந்த மே மாதம் 6-ந் தேதி லண்டனில் கோலாகலமாக நடந்தது.

இந்த நிலையில் மன்னர் சார்லசின் முடிசூட்டை குறிக்கும் வகையில் சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட 50 பென்ஸ் நாணயத்தை, இங்கிலாந்து நாணயங்களை அதிகாரப்பூர்வமாக தயாரிக்கும் 'தி ராயல் மின்ட்' நிறுவனம் நேற்று வெளியிட்டது. இந்த நாணயம் உடனடியாக புழக்கத்துக்கு வரும் என 'தி ராயல் மின்ட்' நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்