< Back
உலக செய்திகள்
அமெரிக்காவில் இருந்து விண்வெளிக்கு வணிக குழுவை மீண்டும் அனுப்பிய நாசா
உலக செய்திகள்

அமெரிக்காவில் இருந்து விண்வெளிக்கு வணிக குழுவை மீண்டும் அனுப்பிய நாசா

தினத்தந்தி
|
23 May 2023 4:22 AM IST

அமெரிக்காவில் இருந்து விண்வெளிக்கு வணிக குழுவை நாசா மீண்டும் அனுப்பியது.

வாஷிங்டன்,

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விண்வெளிக்கு பல செயற்கை கோள்களை செலுத்தி வருகிறது. அதன் கிளை நிறுவனமான புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு தற்போது வணிக குழுவை அனுப்பி உள்ளது.

ஆக்சியம் ஸ்பேஸ்-2 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குழு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் வகை ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டு உள்ளது. இதில் ஓய்வுபெற்ற நாசா விண்வெளி வீரர் பெக்கி விட்சன், அமெரிக்க பைலட் ஜான் ஷோப்னர் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.

இந்த வணிக குழு கேப் கனாவெரல் விண்வெளி நிலையத்தில் தரை இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக ஆக்சியம் ஸ்பேஸ்-1 கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெற்றிகரமாக அனுப்பப்பட்டது.

மேலும் செய்திகள்