< Back
உலக செய்திகள்
அதிவேக இணையத்துக்காக 48 செயற்கைக்கோள்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்
உலக செய்திகள்

அதிவேக இணையத்துக்காக 48 செயற்கைக்கோள்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்

தினத்தந்தி
|
9 July 2023 2:04 AM IST

அதிவேக இணையத்துக்காக 48 செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அனுப்பியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ். இது குறைந்த செலவில் செயற்கைக்கோள்கள் மற்றும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி வருகிறது. அந்தவகையில் தற்போது கலிபோர்னியாவின் வான்டர்பெர்க் ஏவுதளத்தில் இருந்து 48 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன. பால்கன்-9 வகை ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட இந்த செயற்கைக்கோள் அதன் சுற்றுப்பாதையில் நிறுத்தப்பட்டது. இதன்மூலம் இணையம் முற்றிலும் கிடைக்காத இடங்களுக்கும் குறைந்த செலவில் அதிவேக இணையத்தை ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள் வழங்கும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்