< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
நாசாவுடன் இணைந்து 23 செயற்கைக்கோள்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்
|20 April 2024 6:10 AM IST
கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 23 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன.
வாஷிங்டன்,
விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகள் பலவும் போட்டிப்போட்டு செயற்கைக்கோள்களை அனுப்பி வருகின்றன. இந்த போட்டியில் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனமும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. அதன்படி கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 23 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன.
இதற்காக பால்கன்-9 ரக ராக்கெட்டை நாசாவுடன் இணைந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அனுப்பியது. இந்த செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. இவை அதிவேக இணைய சேவைகளுக்காக அனுப்பப்பட்டு இருப்பதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.