< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
வியட்நாம்: குரங்கம்மை பாதிப்பு காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழப்பு
|24 Dec 2023 2:26 AM IST
வியட்நாமில் நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அங்கே இதுவரை 117 பேர் குரங்கம்மை பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
ஹனோய்,
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் குரங்கம்மை நோய் வேகமாக பரவுகிறது. நாட்டின் தெற்கு மாகாணமான லாங் ஆன்னில் நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அங்கே இதுவரை 117 பேர் குரங்கம்மை பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். மேலும் குரங்கம்மை பாதிப்பு காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
நவம்பர் மாதம் முதல் தொற்றுநோய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஹோ சி மின் நகரத்தின் வெப்பமண்டல நோய்களுக்கான மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஹுய்ன் தி துய் ஹோ கூறுகையில், கடந்த மூன்று மாதங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 49 பாதிப்புகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 40 பேர் குணமடைந்ததுடன், மூன்று பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.