< Back
உலக செய்திகள்
தெற்கு ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகம் பயன்படுத்த சிறுவர்களுக்கு தடை

கோப்புப்படம்

உலக செய்திகள்

தெற்கு ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகம் பயன்படுத்த சிறுவர்களுக்கு தடை

தினத்தந்தி
|
14 May 2024 1:47 AM IST

ஆஸ்திரேலியாவிலேயே முதன்முறையாக தெற்கு மாகாணத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கான்பெரா,

இன்றைய நவீன உலகில் சமூக ஊடகங்களை பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற அளவுக்கு அது முக்கிய பங்கு வகிக்கிறது. அதேசமயம் இதனை பயன்படுத்துவதால் பல்வேறு தீமைகளும் ஏற்படுகின்றன.

குறிப்பாக குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், மன வளர்ச்சிக்கு சமூக ஊடகங்கள் பெரும் தீங்கு விளைவிக்கிறது. மேலும் சமூக ஊடகங்களிலேயே அவர்கள் மிகுதியான நேரத்தை வீணடிக்கின்றனர். எனவே ஆஸ்திரேலியாவிலேயே முதன்முறையாக தெற்கு ஆஸ்திரேலியா மாகாணத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என முதல்-மந்திரி பீட்டர் மலினஸ்காஸ் அறிவித்துள்ளார்.

அதன்படி சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த பெற்றோரின் ஒப்புதல் அவசியம். இதற்கான நடைமுறையை ஆராய ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ராபர்ட் பிரெஞ்ச் தலைமையிலான ஒரு குழுவையும் அரசாங்கம் நியமித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்