< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
சோமாலியாவில் நிலவும் மிக மோசமான வறட்சி- 10 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா அறிக்கை
|12 Aug 2022 6:29 PM IST
சோமாலியாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவும் வறட்சி கடந்த ஆண்டு தொடக்கத்தில் மிகவும் மோசமடைந்தது.
ஜெனீவா,
சோமாலியாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவும் வறட்சி கடந்த ஆண்டு தொடக்கத்தில் மிகவும் மோசமடைந்தது. இதனையடுத்து சுமார் 10 லட்சம் மக்கள் சோமாலியாவில் இருந்து இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
குறிப்பாக இந்த ஆண்டு மட்டும், சுமார் 7 லட்சத்து 55 ஆயிரம் பேர் தண்ணீரைத் தேடி தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக ஐ.நா அகதிகள் அமைப்பான யுன்எச்சிஆர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றம் மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போன்றவற்றால் ஏற்பட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்வு அங்கு பட்டினியை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இதனால் வரும் மாதங்களில் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை 5 மில்லியனில் இருந்து 7 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.