< Back
உலக செய்திகள்
புகுஷிமா அணுமின் நிலைய விவகாரம்: ஜப்பானுக்கு கடும் எதிர்ப்பு
உலக செய்திகள்

புகுஷிமா அணுமின் நிலைய விவகாரம்: ஜப்பானுக்கு கடும் எதிர்ப்பு

தினத்தந்தி
|
24 Sept 2023 12:18 AM IST

ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலைய கழிவுநீர் அங்குள்ள பசிபிக் பெருங்கடலில் கலக்கப்பட்டு வருவதால் தென்கொரியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலைய கழிவுநீர் அங்குள்ள பசிபிக் பெருங்கடலில் கலக்கப்பட்டு வருகிறது. இதற்கு தென்கொரியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனினும் இந்த கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு கடலுக்கு அனுப்பப்படுவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என சர்வதேச அணுசக்தி நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

இதுகுறித்து சாலமன் தீவுகளின் பிரதமர் மனாசே சோகவாரே ஜ.நா. சபையில் பேசும்போது, `கழிவுநீர் சுத்திகரிக்கப்படுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனில் அதனை தங்களது நாட்டிலேயே சேமித்து வைக்க வேண்டும். ஆனால் கடலில் கலப்பது அது பாதுகாப்பானது இல்லை என்பதையே காட்டுகிறது. மேலும் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் அறிக்கையில் போதுமான தரவுகள் இல்லை. எனவே கடலை பாதுகாக்க அங்கு கழிவுநீர் கலப்பதை ஜப்பான் உடனடியாக நிறுத்த வேண்டும்' என கடுமையாக சாடினார்.

மேலும் செய்திகள்