< Back
உலக செய்திகள்
சுலோவக்கியா பிரதமர் துப்பாக்கி சூட்டில் காயம்
உலக செய்திகள்

சுலோவக்கியா பிரதமர் துப்பாக்கி சூட்டில் காயம்

தினத்தந்தி
|
15 May 2024 2:17 PM GMT

சுலோவக்கியா பிரதமரை துப்பாக்கியால் சுட்ட சந்தேகத்திற்குரிய நபரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

பிரடிஸ்லாவா,

சுலோவக்கியா நாட்டின் பிரதமராக இருப்பவர் ராபர்ட் பிகோ (வயது 59). இந்நிலையில், தலைநகரில் இருந்து வடகிழக்கே 150 கி.மீ. தொலைவில் உள்ள ஹண்ட்லோவா நகரில் கூட்டம் ஒன்றை இன்று மதியம் நடத்தினார்.

இதில், அவருடைய ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். ஆதரவாளர்களுடனான இந்த சந்திப்பின்போது, மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் பிகோவை நோக்கி 4 முறை சுட்டுள்ளார்.

இதில், பிகோவின் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சுற்றியிருந்தவர்கள் அவரை கார் ஒன்றில் ஏற்றி சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். சந்தேகத்திற்குரிய நபரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். அந்த பகுதியை போலீசார் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தாக்குதலை நாடாளுமன்றத்தில் நடந்த கூட்டத்தொடரின்போது, துணை சபாநாயகர் லூபோஸ் பிளாஹா உறுதிப்படுத்தி உள்ளார். இதன்பின்னர், அடுத்த அறிவிப்பு வரும் வரை அவை ஒத்தி வைக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்