< Back
உலக செய்திகள்
டெல் அவிவ் நகரில் நள்ளிரவில் சைரன் எச்சரிக்கை; ராக்கெட் தாக்குதல் அச்சத்தால் சிதறி ஓடிய பொதுமக்கள்
உலக செய்திகள்

டெல் அவிவ் நகரில் நள்ளிரவில் சைரன் எச்சரிக்கை; ராக்கெட் தாக்குதல் அச்சத்தால் சிதறி ஓடிய பொதுமக்கள்

தினத்தந்தி
|
14 Oct 2023 12:10 AM GMT

டெல் அவிவ் நகரில் நள்ளிரவில் எழுந்த சைரன் எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி சிதறி ஓடினர்.

டெல் அவிவ்,

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது. அதேபோல் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்துகொண்டே செல்கிறது.

இந்த நிலையில் இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ் நகரத்தில், ராக்கெட் தாக்குதலின்போது எழுப்பப்படும் சைரன் எச்சரிக்கை ஒலி நள்ளிரவில் எழுப்பப்பட்டது. இதையடுத்து அங்குள்ள மக்கள் உடனடியாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி குடும்பத்தினருடன் பாதுகாப்பான இடங்களைத் தேடி சிதறி ஓடினர். இதன் காரணமாக வடக்கு இஸ்ரேல்-லெபனான் எல்லையில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

மேலும் செய்திகள்