< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி மந்திரியை இடைநீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
|9 Sept 2023 1:54 AM IST
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி மந்திரியை இடைநீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
சிங்கப்பூர்,
சிங்கப்பூரில் போக்குவரத்து துறை மந்திரியாக பதவி வகிப்பவர் ஈஸ்வரன் (வயது 61). அந்த நாட்டின் நாடாளுமன்ற துணை சபாநாயகராகவும் இவர் பணியாற்றி உள்ளார். இந்திய வம்சாவளியான இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் ஊழல் தடுப்பு புலனாய்வு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட இவர் பிறகு ஜாமீனில் வெளிவந்தார்.
இந்தநிலையில் வருகிற 18-ந் தேதி சிங்கப்பூர் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. அதற்கு முன்பு அவரை எம்.பி. பதவியில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என அங்குள்ள எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே அடுத்த அறிவிப்பு வரும்வரை அவரது சம்பளம் 15 சதவீதம் குறைக்கப்பட்டு வழங்கப்படும் என அந்த நாட்டின் பிரதமர் லீ கடந்த 2-ந்தேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.