< Back
உலக செய்திகள்
சிங்கப்பூர்:  போலீசாரை எட்டி உதைத்த இந்திய வம்சாவளி நபர் மீது குற்றச்சாட்டு பதிவு
உலக செய்திகள்

சிங்கப்பூர்: போலீசாரை எட்டி உதைத்த இந்திய வம்சாவளி நபர் மீது குற்றச்சாட்டு பதிவு

தினத்தந்தி
|
25 Jan 2024 9:28 AM GMT

அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டால், 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட கூடும்.

சிங்கப்பூர்,

சிங்கப்பூரில் வசித்து வருபவர் ஹரிதாஸ் ரையான் பீட்டர் (வயது 49). இந்தியா வம்சாவளியான இவர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 52 வயது காதலியுடன் ஒன்றாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில், குடியிருப்புக்கு அருகே வசித்தவரை தாக்கிய வழக்கில், தகவல் கிடைத்து போலீசார் அவரை கைது செய்ய சென்றனர். அப்போது, அந்நபர் போலீசாரை கைது செய்ய விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

இதில் ஒரு கட்டத்தில் அவர், கைது செய்ய வந்தவர்களில் ஒருவரான 22 வயதுடைய சிறப்பு கான்ஸ்டபிளின் வலது கை மற்றும் இடுப்பில் காலால் மிதித்து இருக்கிறார். இந்த சம்பவத்தில், பீட்டருக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டால், 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட கூடும் அல்லது தண்டனையாக சவுக்கடி கொடுக்கப்பட கூடும். இந்த வழக்கானது பிப்ரவரி 8-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்