< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
கொரோனா தொற்று அதிகரிப்பு: சிங்கப்பூரில் மேலும் ஒரு கொரோனா அலை வரலாம் - சுகாதாரத்துறை எச்சரிக்கை
|7 Oct 2023 12:26 AM IST
சிங்கப்பூரில் கடந்த இரு வாரங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூர்,
2019-ல் முதன் முதலாக சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது பின்னர் உலகையே ஆட்டி படைத்தது. முக கவசம், தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் அவற்றின் பாதிப்பு குறைந்தது. இதனால் பல நாடுகளில் தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளது. ஆனால் சிங்கப்பூரில் இதற்கு மாறாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
அதன்படி கடந்த இரு வாரங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அந்த நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி ஓங் யே குங் கூறுகையில், 'கடந்த ஆண்டை போல இன்னொரு கொரோனா அலை இங்கு வரலாம். எனவே முக கவசம், தடுப்பூசி போடுதல் போன்ற நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்' என அறிவுறுத்தி உள்ளார்.
அதேசமயம் ஊரடங்கு உத்தரவு போடும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.