< Back
உலக செய்திகள்
அமெரிக்க கடற்படையில் சீக்கியர்கள் தலைப்பாகை, தாடி வைத்துக்கொள்ள அனுமதி

கோப்புப்படம்

உலக செய்திகள்

அமெரிக்க கடற்படையில் சீக்கியர்கள் தலைப்பாகை, தாடி வைத்துக்கொள்ள அனுமதி

தினத்தந்தி
|
26 Dec 2022 3:51 AM IST

அமெரிக்க கடற்படையில் சீக்கியர்கள் தலைப்பாகை, தாடி வைத்துக்கொள்ளலாம் என்று கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

வாஷிங்டன்,

சீக்கிய இனத்தை சேர்ந்த ஆண்கள் தலைப்பாகை அணிவது மற்றும் முகத்தில் தாடி வைத்துக் கொள்வதை தங்களின் மத அடையாளமாக கருதுகிறார்கள்.

இந்த சூழலில் அமெரிக்க கடற்படைக்கு தேர்வான சீக்கியர்கள் 3 பேர் பயிற்சியில் இணைவதற்கு முன் தாடியை எடுக்க வேண்டும் எனவும், அவர்கள் தலைப்பாகையுடன் பயிற்சியில் பங்கேற்க அனுமதிக்க முடியாது எனவும் கடற்படை தெரிவித்தது.

இதையடுத்து, ஏகாஷ் சிங், ஜஸ்கிரத் சிங் மற்றும் மிலாப் சிங் சாஹல் என்கிற அந்த 3 சீக்கியர்களும் கடற்படையின் முடிவை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நேற்று விசாரித்த கோர்ட்டு சீக்கியர்கள் 3 பேரையும் தலைப்பாகை மற்றும் தாடியுடன் பயிற்சியில் பங்கேற்க அனுமதிக்கும்படி கடற்படைக்கு உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்