கனடாவில் சீக்கிய பெண் கத்தியால் குத்தி படுகொலை; கணவர் கைது
|கனடாவில் சீக்கிய பெண் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே நகரில் வசித்து வந்த சீக்கிய பெண் ஹர்பிரீத் கவுர். 40 வயதான இவர் திருமணமாகி தனது கணவருடன் வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு நேரத்தில் ஹர்பிரீத் கவுரின் வீட்டில் இருந்து அவரின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் ஹர்பிரீத் கவுரின் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஹர்பிரீத் கவுர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
உடனடியாக போலீசார் அவரை மீட்டு ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொலை தொடர்பாக ஹர்பிரீத் கவுரின் 40 வயது கணவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஹர்பிரீத் கவுரின் கொலை குறித்து தகவல் அறிந்தவர்கள் தாமாக முன்வந்து விசாரணைக்கு உதவுமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் மிசிசாகா நகரில் 21 வயதான பவன்ப்ரீத் கவுர் என்கிற சீக்கிய பெண் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.