< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
அமெரிக்காவில் பள்ளி அருகே துப்பாக்கிச்சூடு - 4 சிறுவர்கள் படுகாயம்
|25 Aug 2022 11:03 AM IST
பள்ளி வளாகம் அருகே பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் உள்ள சிகாகோ மாகாணத்தில் ஒரு உயர்நிலைப்பள்ளி அருகே ஐஸ்கிரீம் விற்பனை கடை உள்ளது. இங்கு நேற்று மதியம் காரில் வந்த மர்மமனிதன் ஒருவன் திடீரென தான் வைத்து இருந்த துப்பாக்கியால் பொதுமக்கள் மீது சரமாரியாக சுட்டான். பின்னர் அவன் வாகனத்தில் ஏறி தப்பி விட்டான்.
இந்த துப்பாக்கிசூட்டில் 4 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 15 வயது சிறுவன் முகம் மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவனது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமி அங்கிருந்து தப்பியோடிய நிலையில், அந்த நபரைத் தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.