< Back
உலக செய்திகள்
மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு - 12 பேர் பலி
உலக செய்திகள்

மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு - 12 பேர் பலி

தினத்தந்தி
|
17 Oct 2022 1:59 AM IST

மெக்சிகோவில் பாரில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர்.



மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோ நாட்டின் குவானாஜுவாட்டோ மாகாணத்தில் ஈராபுவாட்டோ நகரில் பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 6 பேர் ஆண்கள் மற்றும் 6 பேர் பெண்கள் ஆவர். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

தகவலறிந்த பாதுகாப்புப் படையினர் உடனே சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தி, தப்பிச் சென்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன் தென்மேற்கு மெக்சிகோவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் நகர மேயர் உள்பட 18 பேர் கொலை செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.

மேலும் செய்திகள்