< Back
உலக செய்திகள்
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 2 பேர் பலி
உலக செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 2 பேர் பலி

தினத்தந்தி
|
8 July 2024 4:56 AM IST

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் நாளுக்குநாள் துப்பாக்கி சூடு, கத்திக்குத்து தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் டிட்ரியோட் நகரில் வாரவிடுமுறை நாளான நேற்று இரவு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது, கேளிக்கை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 19 பேர் படுகாயமடைந்தனர். இந்த துப்பாக்கி சூடு குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடி நபர் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்