< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: சிறுவன் உயிரிழப்பு
|21 Jun 2022 2:14 AM IST
அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் உயிரிழந்தான்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் நேற்று முன்தினம் இசைக்கச்சேரி ஒன்று நடைபெற்றது. சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கனோர் கலந்து கொண்டு இசைக்கச்சேரியை கண்டு களித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது கூட்டத்தில் இருந்த நபர் திடீரென துப்பாக்கியால் சுடத்தொடங்கினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பீதியடைந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
ஆனாலும் அந்த நபர் கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதில் 15 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானான். மேலும் போலீஸ் அதிகாரி ஒருவர் உள்பட 7 பேர் பலத்த காயம் அடைந்தனர்.