< Back
உலக செய்திகள்
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் கொடூர திட்டங்கள் அடங்கிய கையேட்டில் அதிர்ச்சி தகவல்கள்...
உலக செய்திகள்

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் கொடூர திட்டங்கள் அடங்கிய கையேட்டில் அதிர்ச்சி தகவல்கள்...

தினத்தந்தி
|
17 Oct 2023 9:57 PM IST

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் கொடூர திட்டங்கள் பற்றிய சிறு புத்தகத்தில் உள்ள அதிர்ச்சி விவரங்களை இஸ்ரேல் அதிபர் வெளியிட்டு உள்ளார்.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7-ந்தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லைக்குள் புகுந்து பலரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதன்படி, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் களமிறக்கப்பட்டு உள்ளன.

பணய கைதிகளை மீட்பதற்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக போர் கப்பல் உள்பட ஆயுத உதவிகளை செய்து வருகின்றன.

இஸ்ரேல் மீது நடந்த ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலை அடுத்து பதிலடியாக, 11-வது நாளாக வான், தரை மற்றும் கடல் வழியாக தாக்குதலை நடத்தி வருகிறோம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு படையும் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் அதிபர் ஈசாக் ஹெர்ஜாக் செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, காசா பகுதியில் கொல்லப்பட்டு கிடந்த ஒரு பாலஸ்தீனிய பயங்கரவாதியின் உடல் மேல் 8 பக்கங்கள் கொண்ட சிறு புத்தகம் ஒன்று கிடைத்தது.

அதில், பயங்கரவாதிகளின் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. குடிமக்களின் பகுதிகள், பண்ணை பகுதிகள், நகரம் உள்ளிட்ட இடங்களுக்குள் எப்படி நுழைய வேண்டும்? என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முதன்முதலில், குடிமக்களை கண்டறியும்போது என்ன செய்ய வேண்டும்? அவர்களை சித்ரவதை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புத்தகம் எப்படி சித்ரவதை செய்ய வேண்டும், எப்படி கடத்த வேண்டும்? என சரியாக கூறுகிறது என தெரிவித்து உள்ளார்.

தி வாரியர்ஸ் கைடு ஜிகாதி வெர்சன் என்ற தலைப்பில் உள்ள புத்தகத்தில், சிறை பிடித்தவர்களை அச்சுறுத்துதல், மின்சார அதிர்ச்சிகள் மற்றும் உயிருடன் மரண தண்டனை விதித்தல் போன்ற விசயங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.

கடத்தல்காரர்கள், சிறை பிடித்தவர்களை மனித கேடயங்களாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தேவைப்பட்டால் பணய கைதிகள் கொல்லப்பட வேண்டும். நடவடிக்கைகளை லைவ்வாக ஆவணப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்