< Back
உலக செய்திகள்
அர்ஜெண்டினாவில் கடும் பொருளாதார நெருக்கடி - நிதி மந்திரி பதவி விலகினார்

Image Courtesy : Reuters

உலக செய்திகள்

அர்ஜெண்டினாவில் கடும் பொருளாதார நெருக்கடி - நிதி மந்திரி பதவி விலகினார்

தினத்தந்தி
|
3 July 2022 6:12 AM IST

கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அர்ஜெண்டினாவின் நிதி மந்திரி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

புவனோஸ் ஏரோஸ்,

தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில், தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் பணவிக்கம் 60 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், அங்கு உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருடகளின் விலை பலமடங்காக உயர்ந்துள்ளது.

பொருளாதாரத்தி மீட்டுக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அர்ஜெண்டினா அதிபர் ஆல்பெர்டோ ஃபெர்னாண்டஸ் தலைமையிலான அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் நிதி மந்திரி மார்ட்டின் குஸ்டாவ், இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

இந்த நிலையில், நிதி மந்திரி மார்ட்டின் குஸ்டாவ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் அவர் வழங்கியுள்ளார். அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நிதி மந்திரியாக பதவியேற்றார்.

இந்த ஆண்டு அர்ஜெண்டினாவில் பொருளாதார நெருக்கடி கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டின் நிதி மந்திரி தற்போது பதவி விலகியுள்ளார். அவரது நடவடிக்கைகளுக்கு அரசு தரப்பில் இருந்து முழு ஒத்துழைப்பு கிடைக்கதாதால், அவர் பதவி விலகும் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரம் அர்ஜெண்டினாவின் அடுத்த நிதி மந்திரியாக பதவியேற்பவர் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்