< Back
உலக செய்திகள்
காங்கோ நாட்டில் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு; 10 பேர் பலி
உலக செய்திகள்

காங்கோ நாட்டில் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு; 10 பேர் பலி

தினத்தந்தி
|
17 Jan 2023 12:59 AM IST

காங்கோ நாட்டில் தேவாலயத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 10 பேர் பலியாகினர்.

கின்ஷாசா,

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்கு பகுதியில் உகாண்டா எல்லையையொட்டி உள்ள காசிந்தி நகரில் தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த தேவாலயத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரார்த்தனைக்காக ஏராளமான மக்கள் வந்திருந்தனர். அவர்கள் மனமுருகி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது தேவாலயத்துக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது.

குண்டு வெடிப்பில் சிக்கி 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் சுமார் 40 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்காலம் என அஞ்சப்படுகிறது. இதனிடயே இந்த குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்