< Back
உலக செய்திகள்
நேபாள ஜனாதிபதிக்கு தீவிர பாதிப்பு; டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்க முடிவு
உலக செய்திகள்

நேபாள ஜனாதிபதிக்கு தீவிர பாதிப்பு; டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்க முடிவு

தினத்தந்தி
|
19 April 2023 8:48 AM IST

நேபாள நாட்டு ஜனாதிபதிக்கு உடல்நல பாதிப்பு தீவிரமடைந்த நிலையில் அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று அனுமதிக்க முடிவாகி உள்ளது.

காத்மண்டு,

நேபாள நாட்டு ஜனாதிபதியாக இருந்து வருபவர் ராம்சந்திரா பவுடெல். அவருக்கு திடீரென நேற்று உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மகராஜ்கஞ்ச் பகுதியில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக பயிற்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவருக்கு பிராணவாயு குறைந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவருக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டதும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து உயர்சிகிச்சைக்காக அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதன்படி, அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று சேர்க்கப்பட உள்ளார்.

மேலும் செய்திகள்