< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
செர்பியா: சரக்கு ரெயில் தடம் புரண்டதில் வெளியான அம்மோனியா வாயு- 51 பேருக்கு மூச்சுத்திணறல்
|27 Dec 2022 4:17 AM IST
தடம் புரண்ட ரெயிலிருந்து வெளியான விஷவாயு கலந்த காற்றை சுவாசித்த 51 பேருக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
செர்பியா,
செர்பியா நாட்டின் பைரோட் நகரில் இருந்து 'அம்மோனியா' வாயுவை ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் சென்று கொண்டிருந்து. அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அந்த ரெயில் தடம் புரண்டு, விபத்துக்குள்ளானது.
அதில் ரெயிலில் இருந்த அம்மோனியா வாயு கசிந்து காற்றில் கலந்தது. விஷவாயு கலந்த காற்றை சுவாசித்த 51 பேருக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.