< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
அமெரிக்காவில் கோவிட் தேசிய அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வர செனட் சபை ஒப்புதல்
|31 March 2023 2:33 AM IST
அமெரிக்காவில் கோவிட் தேசிய அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வர செனட் சபை ஒப்புதல்
வாஷிங்டன்,
கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்கா உள்பட உலகின் பல நாடுகள் சொல்லொணா துயரம் அடைந்தது. இதனால் அங்கு லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். பலர் உயிரிழந்தனர். எனவே கொரோனா பரவுவதை தடுக்க 2020-ல் அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவில் கோவிட் தொடர்பாக தேசிய அவசர நிலையை அறிவித்தார். அதன்படி அங்கு பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
தற்போது அங்கு கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. எனவே கோவிட் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான மசோதாவை ஜனாதிபதி ஜோ பைடன் அமெரிக்கா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதற்கு செனட் சபை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. எனவே வருகிற மே மாதத்துக்குள் இந்த கோவிட் தேசிய அவசர நிலை முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.