< Back
உலக செய்திகள்
கோர்ட்டு அறிவிப்பு
உலக செய்திகள்

அமெரிக்காவில் ஊழல் வழக்கில் ஆளுங்கட்சி எம்.பி. குற்றவாளி - கோர்ட்டு அறிவிப்பு

தினத்தந்தி
|
18 July 2024 1:26 AM IST

ஆளுங்கட்சி எம்.பி. மெனண்டெஸ் மற்றும் லஞ்சம் கொடுத்த தொழிலதிபர்களை குற்றவாளி என கோர்ட்டு உறுதிசெய்தது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆளும் ஜனநாயக கட்சி எம்.பி. ஆக உள்ளவர் பாப் மெனண்டெஸ் (வயது 70). இவர் எகிப்து, கத்தார் நாட்டுக்கு ராணுவ உதவியை விரைவுபடுத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. அதேபோல் சட்டவிரோதமாக மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ய சில தொழிலதிபர்கள் அவரை அணுகி லஞ்சம் கொடுத்ததாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரது வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் உரிய ஆவணமின்றி இருந்த 13 தங்கக்கட்டிகள், சொகுசு கார் மற்றும் 4 கோடி ரொக்க பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பான வழக்கு நியூயார்க் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் எம்.பி. மெனண்டெஸ் மற்றும் லஞ்சம் கொடுத்த தொழிலதிபர்களை குற்றவாளி என கோர்ட்டு உறுதிசெய்தது. அவர்களுக்குரிய தண்டனை இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் செய்திகள்