< Back
உலக செய்திகள்
பாகிஸ்தானில் பாதுகாப்பு படை அதிரடி; 7 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பாதுகாப்பு படை அதிரடி; 7 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

தினத்தந்தி
|
16 Nov 2023 1:09 AM IST

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு, அவர்களின் பதுங்கு குழிகள் தகர்க்கப்பட்டன.

கைபர் பக்துன்குவா,

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் டேங்க் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனர் என கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதில், டேங்க் மாவட்டத்தின் கிரி மசான் கேல் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த மோதலில், 7 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

இதன்பின்னர், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவர்களின் பதுங்கு குழிகளும் தகர்க்கப்பட்டன.

சமீபத்திய போலீசார் படுகொலை உள்பட, டேங்க் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எண்ணற்ற பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்ட அவர்கள் தீவிரவாத செயல்களை தொடர்ந்து வந்துள்ளனர்.

நடப்பு ஆண்டில், முதல் 9 மாதங்களில் பாதுகாப்பு படையை சேர்ந்த 386 வீரர்கள் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்து உள்ளனர். சமீபத்தில் அதிகரித்து வரும் பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்த அரசும் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும் செய்திகள்