< Back
உலக செய்திகள்
இந்திய தூதரை தடுத்த காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு கண்டனம்

கோப்புப்படம்

உலக செய்திகள்

இந்திய தூதரை தடுத்த காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு கண்டனம்

தினத்தந்தி
|
2 Oct 2023 1:10 AM IST

இந்திய தூதரை தடுத்த காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

லண்டன்,

இங்கிலாந்துக்கான இந்திய தூதர் விக்ரம் துரைச்சாமி. இவர் கடந்த வெள்ளிக்கிழமை, ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ நகரில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு சென்றார்.

ஆனால், அங்கு வந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் 3 பேர், இந்திய தூதரை காரை விட்டு இறங்க விடாமல் தடுத்தனர். அவருக்கு அச்சுறுத்தல் விடுத்தனர். இதையடுத்து, இந்திய தூதர் திரும்பி சென்றார்.

பின்னர், 3 பேரும் குருத்வாராவுக்குள் சென்று வழிபாட்டு பணிகளை சீர்குலைத்தனர்.

இதுதொடர்பாக அந்த குருத்வாரா நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது. தங்களது குருத்வாரா, அனைத்து மதத்தினரையும் வரவேற்பதாகவும் கூறியுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து ஸ்காட்லாந்து போலீசார் விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்