< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஜெர்மனி பிரதமருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
|27 Sept 2022 12:30 AM IST
ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெர்லின்,
ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் ஹெபஸ்ட்ரீட் நேற்று தெரிவித்தார். ஓலாப் ஸ்கோல்சுக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஸ்டீபன் தெரிவித்தார்.
ஓலாப் ஸ்கோல்ஸ் 2 நாள் பயணமாக வளைகுடா நாடுகளுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் ஜெர்மனி திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஜெர்மனியின் உள்துறை மந்திரி நான்சி பேசருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு தொற்று பாதிப்பு இருப்பதை நான்சி நேற்று டுவிட்டரில் தெரிவித்தார்.