< Back
உலக செய்திகள்
தென்கொரிய எல்லை அருகே 130 முறை பீரங்கி குண்டு வீசிய வடகொரியா - மீண்டும் பதற்றம்
உலக செய்திகள்

தென்கொரிய எல்லை அருகே 130 முறை பீரங்கி குண்டு வீசிய வடகொரியா - மீண்டும் பதற்றம்

தினத்தந்தி
|
5 Dec 2022 12:43 PM GMT

வடகொரியா - தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது.

சியோல்,

அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. குறிப்பாக, தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

இந்நிலையில், தென்கொரிய எல்லைப்பகுதியில் வடகொரியா இன்று பீரங்கி குண்டு வீசி பயிற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையேயான கடல் எல்லையின் சர்ச்சைக்குரிய பகுதியில் வடகொரியா இன்று 130 முறை பீரங்கி குண்டு வீசியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் இந்த நடவடிக்கை கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்