< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஜி20 நிதி மந்திரிகள் மாநாட்டில் ரஷியா பங்கேற்பது அபத்தமானது - கனடா மந்திரி
|17 July 2022 2:03 AM IST
ஜி20 நாடுகளின் நிதி மந்திரிகள் மாநாட்டில் ரஷியா பங்கேற்பது அபத்தமானது என கனடா மந்திரி தெரிவித்தார்.
ஜகார்த்தா,
இந்தோனேசியாவின் பாலித் தீவில் ஜி20 நாடுகளின் நிதி மந்திரிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தோனேசியா, ரஷியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளின்நிதி மந்திரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், ஜி20 நாடுகளின் நிதி மந்திரிகள் மாநாட்டில் ரஷியா பங்கேற்பது அபத்தமானது என கனடா மந்திரி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஜி20 நாடுகளின் நிதி மந்திரிகளின் கூட்டத்தில் ரஷியாவின் பங்கேற்பு அபத்தமானது. இந்தக் கூட்டத்தில் ரஷியா பங்கேற்றது தீயணைப்பு வீரர்களின் கூட்டத்திற்கு தீ வைப்பவர்களை அழைப்பது போல் இருந்தது.
உக்ரைனின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் அதன் பொருளாதார விளைவுகளுக்கு ரஷியா நேரடியாகவும் முழு பொறுப்பாகவும் உள்ளது என தெரிவித்தார்.