< Back
உலக செய்திகள்
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் - ஒருவர் பலி

IMAGE : REUTERS

உலக செய்திகள்

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் - ஒருவர் பலி

தினத்தந்தி
|
28 May 2023 2:27 PM IST

20 ட்ரோன்கள் கொண்டு நடத்தப்பட்ட வானவெளி தாக்குதலில் ஒரு பெண் காயம்.

கீவ்,

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் ஓராண்டை கடந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை நிறுத்த பல நாடுகள் முயற்சித்தபோதும் அது தோல்வியடைந்து போர் நீடித்து வருகிறது.

இதனிடையே, உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் அதிகாரபூர்வமாக உருவாக்கப்பட்டு 1541 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நகரின் பல பகுதிகளில் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகளுக்கு இன்று (ஞாயிறு) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை ரஷ்யா 20க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பல கட்டிடங்கள் தீ பிடித்து எரிந்தன. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் படுகாயமடைந்தனர்

மேலும் செய்திகள்