< Back
உலக செய்திகள்
ரஷியாவின் மிர் கட்டண முறையை ஏற்றுக்கொள்ளும் கியூபா

கோப்புப்படம்

உலக செய்திகள்

ரஷியாவின் மிர் கட்டண முறையை ஏற்றுக்கொள்ளும் கியூபா

தினத்தந்தி
|
21 Jun 2023 3:53 AM IST

ரஷியாவின் மிர் கட்டண முறையை கியூபாவும் ஏற்றுக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாஸ்கோ,

உக்ரைன் போர் எதிரொலியாக ரஷியா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. இதனால் அமெரிக்காவால் வழங்கப்பட்ட மாஸ்டர்கார்டு மற்றும் விசா கார்டுகளின் செயல்பாடுகள் செயலிழந்து போனது. எனவே மற்ற நாடுகளுடன் வர்த்தக தொடர்பில் ஈடுபட முடியாததால் ரஷிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

எனவே தங்கள் மீது பொருளாதார தடைகளை விதிக்காத நட்பு நாடுகளை ரஷியா விரும்பியது. இதனால் அந்த நாட்டின் மத்திய வங்கியால் மிர் கட்டண முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் மற்ற நாடுகளுடன் வர்த்தக தொடர்பில் ரஷியா ஈடுபட்டது. இந்த மிர் கட்டண முறையை 9 நாடுகள் ஏற்றுக்கொண்ட நிலையில் தற்போது கியூபாவும் இந்த முறையை ஏற்றுக்கொள்ள உள்ளதாக ரஷியாவின் தேசிய அட்டை செலுத்தும் அமைப்பின் தலைவர் விளாடிமிர் கோம்லேவ் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்