< Back
உலக செய்திகள்
ரஷிய வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய் சங்கர் சந்திப்பு
உலக செய்திகள்

ரஷிய வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய் சங்கர் சந்திப்பு

தினத்தந்தி
|
6 Sept 2023 4:49 PM IST

ரஷிய வெளியுறவுத்துறை மந்திரியை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் சந்தித்தார்.

ஜகார்தா,

இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்தாவில் 20வது ஏசியான் உச்சி மாநாடு மற்றும் 18வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாடுகளில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடி இன்று இந்தோனேசியா செல்கிறார். இந்த மாநாட்டில் கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார்.

இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இந்தோனேசியா சென்றுள்ளார். அவர் இன்று இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் ரஷிய வெளியுறவுத்துறை செர்ஜி லவ்ரோவை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜி20 மாநாட்டில் ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லவ்ரோ பங்கேற்க உள்ளார்.

ஜி20 மாநாட்டிற்கு முன்னதாக ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி - இந்திய வெளியுறவுத்துறை மந்திரி மட்டத்திலான இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்