< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
குழந்தைகள் மருத்துவமனை உள்பட உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷியா தாக்குதல் - 36 பேர் பலி
|9 July 2024 5:52 AM IST
குழந்தைகள் மருத்துவமனை உள்பட உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷியா நடத்திய தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர்.
கீவ்,
உக்ரைன் - ரஷியா இடையேயான போர் இன்று 865 நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்துவரும் நிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாததால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைனின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து ரஷியா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. உக்ரைன் தலைநகர் கீவ், டினிப்ரோ, கிர்வி ரிஹ், சுலோவன்ஸ்க், கர்மட்ரோஸ் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. தலைநகர் கீவ்வில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர். மேலும், 171 பேர் படுகாயமடைந்தனர்.