< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் - 16 பேர் பலி
|6 Sept 2023 7:53 PM IST
உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர்.
கீவ்,
உக்ரைன் - ரஷியா இடையேயான போர் இன்று 560 வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாத நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைனின் டோனட்ஸ்க் மாகாணம் கொஸ்டினிவ்கா நகரில் உள்ள சந்தை பகுதியில் ரஷியா இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த ஏவுகணை தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும், 28 பேர் படுகாயமடைந்தனர்.
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் உக்ரைன் வந்துள்ள நிலையில் இந்த தாக்குதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.