< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ரஷியாவில் பள்ளி மீது துப்பாக்கிச்சூடு;பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு
|27 Sept 2022 3:39 AM IST
ரஷியாவின் மத்தியப்பகுதியில் உள்ள பள்ளியில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது.
மாஸ்கோ,
ரஷியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள உத்முர்டியா மாகாணத்தில் உள்ள இஜவ்ஸ்க் நகரில் உள்ள பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் நாஜிப்படை இலச்சினை கொண்ட தொப்பியை அணிருந்திருந்தாக சம்பவ இடத்தில் இருந்த மக்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ரஷிய அதிபர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார். பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதல் மனிதாபிமானமற்ற பயங்கரவாத தாக்குதல் எனஅவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பள்ளியில் நடைபெற்ற தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.