< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச்சூடு: ரஷியாவில் 9 பேரை கொன்ற மாணவருக்கு ஆயுள் தண்டனை
|14 April 2023 2:56 AM IST
ரஷியாவில் பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி 9 பேரை கொன்ற மாணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மாஸ்கோ,
ரஷியாவின் கசான் நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு மே மாதம் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் 7 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் என 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 24 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த பள்ளியின் முன்னாள் மாணவரான இல்னாஸ் கலியாவிவ் என்பவர் துப்பாக்கிச்சூடு நடத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.
இதில் துப்பாக்கிச்சூடு நடத்தியதை அவர் ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் நேற்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது. இதில் இல்னாசுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.