< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
புதிய அணுமின் உற்பத்தி நிலைய திறப்புவிழாவிற்காக துருக்கி செல்கிறார் ரஷிய அதிபர் புதின்
|30 March 2023 6:54 AM IST
நாட்டின் முதல் அணுமின் உலையின் திறப்பு விழாவிற்காக ரஷிய அதிபர் புடின் துருக்கிக்கு வரலாம் என்று துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் தெரிவித்தார்.
அங்காரா,
ரஷியாவின் அரசு அணுசக்தி நிறுவனமான ரொசாட்டம், துருக்கியில் புதிய அணுமின் நிலையத்தை கட்டியுள்ளது. துருக்கியின் முதல் அணுமின் உலையின் திறப்பு விழாவிற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் ஏப்ரல் 27ஆம் தேதி துருக்கிக்கு வரலாம் என்று துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் தெரிவித்தார்.
ஏப்ரல் 27 ஆம் தேதி புதின் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. அவர் வரமுடியாத சூழலில், காணொலி வாயிலாக விழாவில் இணைவார் என்றும் அவர் தெரிவித்தார்.
புடின் துருக்கிக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக துருக்கிய செய்திகளை ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மறுத்துள்ளது.
அக்குயு அணுமின் நிலைய கட்டுமானம் உட்பட எரிசக்தி துறையில் கூட்டு மூலோபாய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவது குறித்து புடினும் எர்டோகனும் தொலைபேசி அழைப்பின் போது விவாதித்ததாக கிரெம்ளின் கூறியுள்ளது.