< Back
உலக செய்திகள்
ரஷிய பிரதமர் வரும் 23-ந்தேதி சீனாவுக்கு சுற்றுப்பயணம்

Image Courtesy : AFP

உலக செய்திகள்

ரஷிய பிரதமர் வரும் 23-ந்தேதி சீனாவுக்கு சுற்றுப்பயணம்

தினத்தந்தி
|
20 May 2023 4:44 AM IST

ரஷிய பிரதமர் மைக்கேல் மிஷுஸ்டின் சீனாவுக்கு சென்று அதிபர் ஜின்பெங் மற்றும் உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.

மாஸ்கோ,

ரஷியா-உக்ரைன் போரில் தொடக்கத்தில் இருந்தே ரஷியாவுக்கு ஆதரவாக அதன் நட்பு நாடான சீனா உள்ளது. ஆனால் போர் ஓர் ஆண்டை கடந்தும் நடந்து வரும் நிலையில் அதனை நிறுத்தும்படி உலக நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தின. இதற்கு உதவி செய்வதாக சீனாவும் உறுதியளித்தது. அதன்படி சீன அதிபர் ஷி ஜின்பெங் ரஷியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் போர் முடிந்தபாடில்லை.

இந்த நிலையில் தற்போது ரஷிய பிரதமர் மைக்கேல் மிஷுஸ்டின் வருகிற 23-ந் தேதி சீனாவுக்கு சென்று அதிபர் ஜின்பெங் மற்றும் உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளார். அப்போது வர்த்தகம் மற்றும் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்