< Back
உலக செய்திகள்
உக்ரைன் மீது ரஷியா சரமாரி தாக்குதல்: 50 பேர் பலி; 200க்கும் மேற்பட்டோர் காயம்
உலக செய்திகள்

உக்ரைன் மீது ரஷியா சரமாரி தாக்குதல்: 50 பேர் பலி; 200க்கும் மேற்பட்டோர் காயம்

தினத்தந்தி
|
3 Sept 2024 11:19 PM IST

உக்ரைன் மீது ரஷியா திடீர் தாக்குதல் நடத்தி உள்ளது.

காசா,

உக்ரைன்-ரஷியா இடையிலான போர் இரண்டு ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் மீது ரஷியா திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 200 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது:

உக்ரைனின் பொல்டாவா பகுதியில் உள்ள கல்வி நிலையம் மற்றும் மருத்துவமனை மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் குறைந்தது 50பேர் பலியாயினர். 200 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ரஷியா இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தி உள்ளது என்றார்.

இதற்கிடையே, உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது/ இது 'காட்டுமிராண்டித்தனமான' செயல் என்று கூறி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் உக்ரைன் ரஷியா மீது தாக்குதல் நடத்தியது. இந்தநிலையில் ரஷியா உக்ரைன் மீது திடீர் தாக்குதல் நடத்தி உள்ளது.

மேலும் செய்திகள்