< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ரஷ்யாவில் 22 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்
|31 Aug 2024 10:49 PM IST
ரஷ்யாவில் 19 பயணிகள் உள்பட 22 பேருடன் சென்ற மி -8 ரகத்தை சேர்ந்த ஹெலிகாப்டர் மாயமாகியது.
மாஸ்கோ,
ரஷ்யாவில் 19 பயணிகள் உள்பட 22 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயமாகியுள்ளது. ரஷ்யாவின் தொலை தூர கிழக்கு பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்ப பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. மாயமான ஹெலிகாப்டர் மி -8 ரகத்தை சேர்ந்தது ஆகும்.
2 என்ஜின் கொண்ட இந்த ஹெலிகாப்டர் 1960-களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் பரவலாக இந்த ரக ஹெலிகாப்டரே அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாயமான இந்த ஹெலிகாப்டரை தேடும் பணியில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.