< Back
உலக செய்திகள்
உக்ரைன் மீது தொடர் ஏவுகணை தாக்குதல்: 5 கண்காணிப்பு நிலைகளை அழித்த ரஷியா

கோப்புப்படம்

உலக செய்திகள்

உக்ரைன் மீது தொடர் ஏவுகணை தாக்குதல்: 5 கண்காணிப்பு நிலைகளை அழித்த ரஷியா

தினத்தந்தி
|
23 May 2023 3:57 AM IST

உக்ரைன் மீது தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்தி அதன் 5 கண்காணிப்பு நிலைகளை ரஷியா அழித்தது.

கீவ்,

ரஷியா-உக்ரைன் போர் ஏற்பட மிக முக்கிய காரணம் அதன் புவியியல் அமைப்பு ஆகும். அதாவது உக்ரைன் ஒரு புறம் ரஷியாவையும், மற்றொரு புறம் ஐரோப்பிய நாடுகளையும் எல்லைகளாக கொண்டுள்ளன. இதில் உள்நாட்டு விவகாரங்களில் ரஷியா தலையிடுவதாக உக்ரைன் குற்றம்சாட்டி வந்தது.

2014-ம் ஆண்டு உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்த கிரீமியாவை ரஷியா ஆக்கிரமித்து கொண்டது. இது இரு நாடுகளுக்கு இடையே உறவில் விரிசலை ஏற்படுத்த தொடங்கியது.

சிறப்பு ராணுவ நடவடிக்கை

ரஷியாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மேலும் தொடர்ந்ததால் தனது நாட்டின் பாதுகாப்பு கருதி நேட்டோ அமைப்பில் இணைய முயற்சி எடுத்தது. இது ரஷியாவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் தொடக்கம் முதலே ரஷியா இதனை எதிர்த்து வந்தது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா போரை தொடுத்தது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அவை ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவிகளை செய்து வருவதால் ஒரு ஆண்டை தாண்டியும் போர் நடந்து வருகிறது.

ஏவுகணை தாக்குதல்

இதனால் சர்வதேச அளவில் பொருளாதார பாதிப்புகள் ஏற்படுவதால் போரை நிறுத்தும்படி பல நாடுகள் வலியுறுத்தின. இருப்பினும் போர் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் இரு தரப்பினரும் மாறிமாறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ரஷியா ஏவுகணைகள் மற்றும் டாங்கி எதிர்ப்பு குழுவினர் குப்யான்ஸ்க் பகுதியில் உள்ள 5 போர் கண்காணிப்பு நிலைகளை அழித்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஸ்புட்னிக் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்