< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
அமெரிக்க டிரோன் மீது ரஷிய போர் விமானம் மோதல்
|15 March 2023 5:18 AM IST
அமெரிக்காவின் ஆளில்லா டிரோன் மீது ரஷிய போர் விமானம் மோதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் ஆளில்லா டிரோன் மீது ரஷிய போர் விமானம் மோதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. அமெரிக்காவின் எம்.க்யூ-9 ரக டிரோனும், ரஷியாவின் எஸ்.யு-27 ரக போர் விமானமும் கருங்கடல் பகுதியில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இதுதொடர்பாக அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் கூறுகையில்,
அமெரிக்க ராணுவத்தின் எம்.க்யூ -9 ரக டிரோன் வழக்கமாக சர்வதேச விமானங்களை கண்காணித்து வந்தபோது அதனை இடைமறித்து ரஷிய போர் விமானம் அமெரிக்க டிரோன் மீது மோதியது என தெரிவித்துள்ளனர்.