< Back
உலக செய்திகள்
ரஷியாவில் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.400 கோடி அபராதம்
உலக செய்திகள்

ரஷியாவில் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.400 கோடி அபராதம்

தினத்தந்தி
|
11 April 2024 12:02 PM IST

சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க மறுத்த குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்துக்கு ரூ.400 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மாஸ்கோ,

ரஷியாவில் பயங்கரவாதம் மற்றும் தன்பாலின் ஈர்ப்பு குறித்தான உள்ளடக்கம் கொண்ட தகவல்களை பரப்பும் யூடியூப் வீடியோக்களை நீக்குமாறு கூகுள் நிறுவனத்துக்கு மாஸ்கோ கோர்ட்டு அறிவுறுத்தியது. இதனை நீக்க மறுத்தநிலையில் நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு புறம்பான தகவல்களை பரப்பி பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக கூகுள் மீது கோர்ட்டு குற்றஞ்சாட்டியது.

இந்தநிலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க மறுத்த குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்துக்கு ரூ.407 கோடி (49 மில்லியன் டாலர்) அபராதம் விதித்து மாஸ்கோ கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்