'வாக்னர்' தலைவர் பிரிகோஜின் விமான விபத்தில் பலி - உறுதிபடுத்திய ரஷியா..!
|உறுதிப்படுத்தியுள்ளது. விமான விபத்தில் கிடைத்த உடல்களை மரபணு ஆய்வு செய்ததில் பிரிகோஜின் உயிரிழந்தது உறுதியானதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாஸ்கோ,
ரஷியாவில் அதிபர் புதினுக்கு எதிராக அண்மையில் கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் கூலிப்படைத் தலைவர் பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்துவிட்டதை அந்நாடு உறுதிப்படுத்தியுள்ளது. விமான விபத்தில் கிடைத்த உடல்களை மரபணு ஆய்வு செய்ததில் பிரிகோஜின் உயிரிழந்தது உறுதியானதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்த 10 பேரும் உயிரிழந்துவிட்டனர், விபத்து நேரிட்ட இடத்தில் கிடைத்த அனைத்து உடல்களும் அடையாளம் காணப்பட்டுவிட்டன. அவை அனைத்துமே, விமானத்தின் பயணிகள் பட்டியலில் இருந்த 10 பேருடையதுதான்" என்று விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
ரஷியாவின் வான் போக்குவரத்து ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட தகவல்களில் பிரிகோஜினின் தனியார் ஜெட் விமானம் விபத்தில் சிக்கியதாகவும், இந்த தனியார் விமானத்தில் பயணம் செய்தவர்கள் பட்டியலில் பிரிகோஜின் பெயர் இடம்பெற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
விமானம் மாஸ்கோவில் இருந்து செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கி சென்று கொண்டிருந்த போது நடுவழியில் வெடித்து சிதறியது குறிப்பிடத்தக்கது.